தன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர்

தன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர்
தன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர்


லக்னோ: தன் கணவர் இறந்த செய்தியை தானே செய்தியாக வாசித்த துயர சம்பவம் பெண் செய்தியாளருக்கு நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கரில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் வாகனத்தில் வந்த 5 பேரில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர் எனவும், அது யார் யார் என்பது குறித்த விவரங்களை ஐபிசி - 24 செய்தி நிருபர் தனது தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக கூறியுள்ளார். அப்போது நேரலையில் செய்தி தொகுப்பாளர் சுப்ரீட் கவுர் விபத்து குறித்த விவரங்களை கேட்டறிந்துள்ளார். அந்த விபத்தில் தன் கணவர் மரணமடைந்த செய்தி நிருபர் கூறிய விவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. அந்த வேளையில் நேரலையில் இருந்த கவுர் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்துள்ளார்.