ஒரு இராணுவ வீரனின் கண்ணீர்

 



"கல்யாணம் பண்ணிப்பார்"

"புது வீடு கட்டிப்பார்"
*
"இராணுவத்துக்கு வந்துப்பார்"......
*

இனிமேல் இந்த வாசகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

*
*
பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம்.

ஆனாலும் இது ஒரு மாய வலை...

*
சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க முடியாது.

வேண்டாம் என்று வெளியிலும் போக முடியாது.

*
நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு,

வரவு, செலவு இவையெல்லாம்,

ஒரு தொலைபேசி அழைப்பிலேயே அடங்கிவிடும்.

*
வலிக்கும்...

ஆனாலும் சொல்ல முடியாது.

அப்படியே சொன்னாலும், யாருக்கும் புரியாது.

யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.

*
அழுவோம்.....

ஆனாலும் யாருக்கும் தெரியாது.

ஏனென்றால்,

இங்கே பார்ப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

*
வலியென்றால் தோளில் சாயவும்,

சந்தோசம் என்றால் அணைத்துக்கொள்ளவும்,

அன்யோன்யமானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

கண் எட்டும் தூரம் வரை,

தனிமை மட்டும் தான் மிஞ்சும்....

*
நன்றாக பசிக்கும்.

நிறைய சாப்பிடவும் செய்வோம்.

ஆனாலும் வயிறும், மனமும் நிறையாது....

ஏனென்றால், எங்காவது ஒரு மூலையில்

ஒரு வித ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

*
நியாயமாக பார்த்தால்,

ஊரில் இருந்து தான் நமக்கு யாராவது

ஃபோன் பண்ணி விசாரிக்க வேண்டும்..

ஆனாலும், அப்படி யாரும்

கூப்பிட போவதில்லை என்றும் தெரியும்.

தெரிந்தும் யாராவது விசாரிக்கமாட்டார்களா..??

என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

*
ஆனாலும், குடும்பத்துல் யாராவது ஒருத்தருக்கு

2 வாரம் ஃபோன் பண்ணாமல், பண்ணிபாருங்கள்.

நம்மிடம் கேட்பார்கள் பாருங்கள்.....

"என்னப்பா, இரானுவத்துக்கு போன உடனே

எங்களையெல்லாம் மறந்திட்ட போல" என்று........

அப்பொழுதும் இங்கிருந்து சிரித்துக்கொண்டே

பதில் சொல்ல வேண்டும்.....!!

*

"மனதின் காயங்களை மறைக்கிறேன்.

ஊராருக்கு ஆனந்தம் தரவே சிரிக்கிறேன்".

விடுமுறைக்கே அன்று தான் வந்திருப்போம்

ஆனால் கேட்கப்படும் கேள்வியோ

மீண்டும் எப்பொழுது கிளம்புகின்றாய் என்று

**************
இதெல்லாம் ஏன் சொல்றேன்னா

ம்ஹூம்... ஏன்னு தெரியல....

சும்மா சொல்லணும் போல தோணிச்சு

சிரிச்சிக்கிட்டே.... ஸ்மைலி..!!

இரானுவத்தில் இருக்கும் ஒரு சகோதரனின் வலி

எனக்கு உணர்த்திய இந்த வரிகள்......

இன்னும் இவர் போன்று

எத்தனை உடன்பிறப்புகளோ... நண்பர்களோ....

தெரியவில்லை... —
என்றும் அன்புடன்
ஒரு இராணுவ வீரன்....💫