பைரவா விமர்சனம் :

மருத்துவ கல்லூரியில் நடக்கும் பிரச்சனைகளை கமர்ஷியலாக கூறியிருக்கும் படம் தான் இந்த பைரவா.

கதை களம் :

பேங்கில் கேஷ் கலெக்டராக இருக்கிறார் விஜய். பேங்கில் பணம் வாங்கிக்கொண்டு தராமல் ஏமாற்ற நினைக்கும் ரவுடிகளிடம் இருந்து பணத்தை வசூல் செய்யுள் வசூல் மண்ணாக வருகிறார்.

ஒரு திருமணத்தில் கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் விஜய்க்கு காதல் வருகிறது. காதலை சொல்ல போகும்போது ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

அந்த சமயத்தில் விஜய்யிடம் தனது பிரச்சனையை கூறுகிறார். இதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷை அந்த பிரச்சனையில் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.

படத்தை பற்றி :

இளையதளபதி விஜய்யின் ஆரம்ப காட்சி ரசிகர்களுக்கு விருந்து. படத்தில் காமெடி காட்சிகள் பெரிதாக ஒர்க்அவுட் ஆகவில்லை.

முதல் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சி கொஞ்சம் நீளமாக உள்ளது. இண்டர்வல் காட்சியில் தளபதி பேசும் வசனத்திற்கு தியேட்டர் அதிர்கிறது.

இரண்டாம் பாதி மெதுவாக நகர்கிறது அதற்கு காரணம் அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.

இரண்டாம் பாதியில் வர சமுதாய கருத்து வரவேற்கத்தக்கது. பாடல்கள் கொஞ்சம் சுமார் தான் என்றாலும் பின்னணி இசை நன்று.

படத்தின் பிளஸ் :

விஜய், கீர்த்தி சுரேஷ்

பின்னணி இசை

இண்டர்வல் காட்சி

படத்தின் மைனஸ் :

காமெடி

படத்தின் நீளம்

இரண்டாம் பாதியின் திரைக்கதை

மொத்தத்தில் பைரவா :

விஜய் ரசிகர்களுக்கு படம் பிடிக்கும். முந்தைய படங்களில் முதல் வகுப்பு ரசிகர்களை திருப்திபடுத்தி வந்த விஜய் பைரவா படத்தில் அதனை செய்ய தவறிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

பைரவா படத்தின் ரேடிங் – 2.8/ 5