புதுப்பிக்கப்பட்ட நேதாஜி கார்... பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்தார் பிரணாப் முகர்ஜி!ஆங்கிலேயரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாறுவேடத்தில் தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த கார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலையில் பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


இந்தியா சுதந்திரம் பெற வேண்டி தீவிரமான முறையில் போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியதால், ஆங்கிலேயர்களின் முக்கிய இலக்காக மாறிப் போனார். இந்த நிலையில், ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கொல்கத்தாவில் உள்ள மூதாதையர் வீட்டில் சிறை வைக்கப்பட்டார்.

ஆனால், ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்காக, வீட்டுக் காவலில் இருந்து தப்பிக்க முடிவு செய்தார். அதன்படி, அவரது சகோதரர் சிசர் போஸ் உதவியுடன், அவர் கொண்டு வந்த காரில் வீட்டில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்றார் நேதாஜி.

Click hear to read more