இந்திய சினிமா பிரபலங்களில் இரண்டு பேர் தான் மஸ்டாங் GT காரை வைத்திருக்கின்றனர். அதில் ஒருத்தராக மாறி உள்ளார் தனுஷ்.

கோல்மால், சிங்கம் ரீமேக் , சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே போன்ற திரைப்படங்களின் டைரக்டர் ரோஹித் ஷெட்டி, தன் படங்களிலேயே கார்களை பயன்படுத்துவதில் பெரிய ஆசை கொண்டவர். அவர்தான் தன்னுடைய செல்ப் ட்ரைவிங்க்காக ஃபோர்டு மஸ்டாங் GT காரை வாங்கி உள்ளார்.

அவருக்கு அப்புறம் சினிமா பிரபலங்களில் நம்ம தனுஷ் தான் இந்த காரை வாங்கி உள்ளார். போனி கார் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த கார் ஒரு காட்டெருமை போன்ற மாசிவ் லுக் தரக்கூடியது. தனுஷ் காரின் கலர் கருப்பு.

250 கி மீட்டர் வேகத்திலே பறக்கக்கூடிய இந்த கார், இந்திய சாலைகளுக்கு ஏற்பவே வடிவமைக்கப்பட்டுள்ளது. நாலு டிரைவிங் மோடோடு பக்காவான கார் இது. எக்ஸ் ஷோரும் விலை சென்னையில் 66.36 லட்சம் தான்.