போராட்டம் வெற்றிபெற இந்த 10 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்!1) பீட்டாவை தமிழகத்தில் தடை செய்வதோடு, ஜல்லிக்கட்டை தமிழகத்தின் மாநில விளையாட்டாக அறிவித்து,  விதிகள் உருவாக்கப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

2) தமிழகத்தின் நீர்வளத்தை சுரண்டும்,  பன்னாட்டு குளிர்பானங்கள்(coke,pepsi) , உணவு விடுதிகள் (கே.எஃப்.சி, மெக் டொனால்டு), கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தடை விதித்து, தமிழர்களின் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

3) தமிழக விவசாயிகளுக்கு தனி சேட்டிலைட் டிவி சேனல் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் தங்களது குறைகளை மொபைல் கேமரா மூலம் படம்பிடித்து, அந்த சேனலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பும் வகையில் அவர்களுக்கு login ஐ.டிகள் வழங்கப்பட வேண்டும். இந்த தொலைக்காட்சி செய்திகளையே புகாராக பதிவு செய்து, அந்த நபர்களுக்கு அரசு மொபைல் எண்ணிற்கு ரசீது அனுப்ப வேண்டும். புகார் மீதான நடவடிக்கை குறித்து அப்டேட் செய்ய வேண்டும். விவசாய  கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். தண்ணீர் பிரச்சனையை காலக்கெடு நிர்ணயித்து தீர்க்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடுவதோடு, பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும். கள்ளச்சாராயத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

4) கச்சத்தீவை திரும்பி வாங்குவதோடு, தமிழக மீனவர்கள் விபத்தாக எல்லை தாண்டினால், அவர்களை மரியாதையோடு இலங்கை ராணுவம் திருப்பி அனுப்ப வழிவகை செய்வதோடு,  தாக்குதல் நடத்தப்பட்டால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை மீது இந்திய ராணுவ தாக்குதல் நடத்தி, அந்நாட்டிற்குள் அதிரடியாக புகுந்து, தாக்குதல் நடத்திய அதிகாரிகளை கைது செய்து வந்து, தமிழக சிறைகளில் அடைக்க வேண்டும்.

5) அனைத்து தனியார் கல்லூரிகள், பள்ளிகள் அரசுடமையாக்கப்பட்டு வருமான வரிச் சான்றிதழை அடிப்படையாக வைத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.  அறிவியில், கணிதம், கணிப்பொறி அறிவியல் மற்றும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தேவைப்படும் அனைத்து பாட புத்தகங்களையும் மிக எளிய தமிழில், படிப்பறிவு இல்லாத சாதாரண பாமரனுக்கு கூட புரியும் வகையில் தமிழில் மொழிப்பெயர்த்து வழங்க வேண்டும்.

6) 3 தலைமுறைகளாக அரசு ஊழியர்களாக இருப்பவர்களுக்கு, அடுத்த 2 தலைமுறை அரசு பதவி எதுவும் வழங்கக் கூடாது.  இதுவரை அரசாங்க பணியே கிடைக்காத, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.