'"தனி ஒருவன்"....! பிரதமர் வீட்டின் முன் தரையில் அமர்ந்து அன்புமணி போராட்டம் ....!' தனி ஒருவன் :....! பிரதமர் வீட்டின் முன் தரையில் அமர்ந்து அன்புமணி போராட்டம் ....!

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக, அலங்காநல்லூர் முதல், மெரீனா வரை போராட்டம் சூடு பிடித்துள்ளது. நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஜல்லிகட்டுக்கு ஆதரவான போரட்டத்திற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளும், திரைத்துறையினர் மற்றும் பல கட்சியினர் ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடந்து, யாரும் எதிர்பாராத விதமாக, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கூட, ஜல்லிக்கட்டுகாக ராஜினாமா செய்ய தயார் என ,டெல்லியில் உள்ள பிரதமர் வீடு முன் தரையில் அமர்ந்து பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பல கட்சினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், டாக்டர் அன்புமணி ராமதாஸின் இந்த போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.