சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை 4G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி J1 (4G) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் J1 (4G) ஸ்மார்ட்போன் தங்கம், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும்.   

சாம்சங் கேலக்ஸி J1 (4G) ஸ்மார்ட்போன் ஏற்கனவே ரஷ்யா, மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்சமயம் இந்தியாவிலும் வெளியிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி J1 (4G) சிறப்பம்சங்களை பொருத்த வரை ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் சார்ந்த இயங்குதளம், டூயல் சிம் கார்டு, 4.5 இன்ச் WVGA 480x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1GB ரேம் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை கேலக்ஸி J1 (4G) ஸ்மார்ட்போனில் 4G எல்டிஇ மற்றும் வோல்ட்இ வசதி, GPRS/ EDGE, 3G, வை-பை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, GPS மற்றும் மைக்ரோ யுஎஸ்பி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இத்தனை சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி J1 (4G) ஸ்மார்ட்போனினை சக்தியூட்ட 2050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,890 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.