ஜல்லிக்கட்டு போராட்டம்:பண்பாட்டை தமிழரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ வடமாநில பெண் பெருமிதம்ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும். பீட்டா அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராடி வருகின்றனர்.

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் 100மணி நேரங்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் திறக்காமல் வீடுவாசல் திரும்ப மாட்டோம் என அலங்காநல்லூர் மக்கள் உறுதியுடன் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

இது போல் மெரீனா கடற்கரையிலும் போராட்டம் தொடருகிறது.இது போன்ற கண்ணியமான போராட்ட களத்தை மொத்த இந்தியாவிலும் இதுவரை எவரும் கண்டிருக்க வாய்ப்பில்லை என உலகமே வியக்கிறது..  தலைமையே இல்லாமல் ராணுவக் கட்டுப்பாட்டோடு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இளம்பெண்களும் பங்கேற்றுள்ள இந்த போராட்டங்களில் இதுவரை எந்த அத்துமீறல்களும் நடைபெறவில்லை.

Click hear to read more