நாளை 1 மணிக்கு ஜல்லிக்கட்டு அறிவிப்பு.. இதன் பின்னால் மாபெரும் சதியும் உள்ளது.. ஏமாற வேண்டாம்நாளை மதியம் ஒரு மணி அளவில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகின்றது.இதை அறிவித்த பின்னர் யாரும்  உற்சாகத்தில் போராட்டத்தை நிறுத்திவிட்டு கூட்டத்தை கலைக்க வேண்டாம்.அப்படி நாம் இந்த கூட்டத்தை கலைத்தால் நாம் நினைத்தால் கூட மீண்டும் இந்த மாபெரும் கூட்டத்தை சேர்க்க இயலாது.இந்த அறிவிப்பில் ஒரு மாபெரும் சதி அடங்கியுள்ளன.

பீட்டா இயக்கத்தை காப்பாற்ற மத்திய அரசு வெளியிடும் அறிவிப்பாகும்.மேலும் இந்த அறிவிப்பு நிரந்தரமானவை அல்ல.நம்மை ஏமாற்றுவதற்காக செய்யும் செயலாகும். நாம் நடத்தும் போராட்டம் உண்மையானால். நாம் தமிழன் என்பது உண்மையானால்,மாடுகளை  நாம் தெய்வமாக கருதுவது உண்மையானால் பீட்டா இயக்கத்தை நம் நாட்டிலிருந்து தடை செய்து,ஜல்லிக்கட்டு நடத்த நிரந்திர சட்டத்தை கொண்டு வரும் வரை மேலும் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு கைவிடாமல் போராடுவோம்.

Click hear to read more