புத்தாண்டு கொண்டாட்டத்தில் மிகப்பெரிய பாலியல் வன்முறை நம்ப தகுந்த ஆதாரங்கள் சிக்கியது பெங்களூர் போலீஸ் கமிஷனர்பெங்களூர்

பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எம்.ஜி ரோட்டில் பெண்களுக்கு நடந்த மிகப்பெரிய பாலியல் வன்முறை நடைபெற்றது. இதில் பல பெண்கள் பாதிக்கபட்டனர்.

இது குறித்து வழக்குபதிவு செய்யபட்டு விசாரணை நடைபெற்று வருவதாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் பிரவீன் சூத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

சூத் கடந்த ஜனவரி 1 ந்தேதி தான் பதவி ஏற்று கொண்டார்.எம்.ஜி ரோடு மற்ரும் பிரிகேட் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களை சட்ட விரோதமாக பிடித்து வைத்தல் மற்றும் பாலியல் கொடுமைகள் நடைபெற்றது.தற்போது இந்த  நம்ப தகுந்த ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாக கூறி உள்ளார்.

துணை ஆணையர் பதவியில் உள்ள ஒருவர் இது குறித்து விசாரணைனை நடத்தி வருகிறார். எம்.ஜி ரோட்டை சுற்றி 45 சிசிடி விகேக்கிராக்கல் உள்ளன அதன்  வீடியோ பதிவுகள் அனைத்தும் போலீசார்  கைவசம் உள்ளன. விசாரணை அமைஅதியாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.