‘எரியும் நெருப்பில் மீடியாக்கள் எண்ணெய் ஊற்றுகிறது’ பழி சுமத்தும் பீட்டாஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மராட்டியம், கர்நாடகம், குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் உலக நாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு தீவிர எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டாவிற்கு போராட்டக்காரர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று உள்ளது.

இந்நிலையில் பீட்டா இந்தியாவின் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டியின் வரலாறு தெரியாது; மீடியாக்களே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது.

போராட்டம் நடத்தியவர்களுக்கு தெரியாது ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக முதலில் வழக்கு தொடர்ந்தவர் தமிழர் என்பது. ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த வாலிபரின் தந்தையே முதலில் வழக்கு தொடர்ந்தார் என்று கூறி உள்ளார்.