தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குனர் ஆகியோருக்கு  கடிதம் எழுதி உள்ள பீட்டா, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை தடுக்கவேண்டும்.

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்துபவர்களை கைது செய்ய வேண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை எந்த ஒரு வடிவத்திலும் அனுமதிக்க கூடாது.

ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை முறைப்படி அமல்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தடையை முழுமையாக அமலாவதை உறுதிசெய்க என்று கூறிஉள்ளது.

ஆனால் காவல் துறை இயக்குனர் பெயரில் ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் டிஜிபி அசோக்குமார் பெயர் இடம் பெற்று உள்ளது.அவருக்கு பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.