ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். திருச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரையில் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, மதுரை சட்டக் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கே.கே.நகர் ஆர்ச் அருகே மறியலில் ஈடுபட முயன்றனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக பழைய ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்றடைந்தனர். அங்கு ஏற்கெனவே திரண்டிருந்த பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்தனர்.

தடுப்பு வேலிகளை மீறி மாணவர்கள் உள்ளே செல்ல முயன்றதையடுத்து மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின், சட்டக் கல்லூரி மூன்றாமாண்டு மாணவர் ராஜ்குமார் தலைமையில் 10 பேர் ஆட்சியரை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித் தனர்.

இதற்கிடையில் மாணவர்கள் தங்களை ஆட்சியர் நேரில் சந்திக்க மறுத்தார் எனக் கூறி கோரிப் பாளையத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் உட்பட 140 பேரை போலீஸார் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். மதுரையில் மாணவர்களின் ஊர்வலம், மறியலால் கோரிப் பாளையம், தல்லாகுளம், நீதிமன்றம், தமுக்கம் மைதானம், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவர் அமைப்பி னர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளைகள் வளர்ப்போர், பொது மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் என 2,500-க்கும் அதிகமானோர் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமெழுப்பிய மாணவர்கள், திடீரென ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களில் சிலர் திடீரென ஜல்லிக்கட்டுக் காளையை அங்கு ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மாணவர்கள் போராட் டத்தைக் கைவிட மறுத்து, ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர்.

இதையடுத்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அபிராமி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அபிராமி அலுவலகத்துக்குத் திரும்பிச் சென்றார். பேச்சுவார்த்தை நடத்திய காவல் துணை ஆணையர் மயில்வாகனன், போராட்டம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாநில, மத்திய அரசுகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததையடுத்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலைக் கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

ஆயிரக்கணக்கானோர் மறிய லில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகச் சாலையில் போக்கு வரத்து கடுமையாகப் பாதிக்கப் பட்டது. ஆட்சியர் அலுவலகச் சாலையில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.

தஞ்சையில் பேரணிஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் எதிரில் நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசுக்கும், விலங்குகள் நல உரிமை அமைப்பான ‘பீட்டா’வுக்கும் எதிராகவும் முழக்கமிட்டனர். தொடர்ந்து, தடையை மீறி பேரணியாகச் சென்றனர். இதேபோல, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி மன்னார்குடியில் சமூக வலைதள நண்பர்கள் 500 பேர் பேரணியாகச் சென்றனர்.