இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் நகரில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அங்கு அனிஷா சர்மா  (22) என்ற கல்லூரியில் படிக்கும் இளம் பெண் வந்துள்ளார்.

அங்கு வந்து சில பூஜைகள் செய்த அனிஷா  பின்னர் திடீரென அங்கிருந்த கழிவறைக்குள் சென்று தன் உடலில் தீ வைத்து கொண்டார். பின்னர் அவர் அலறல் சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் ஓடி சென்று அங்கு பார்த்தனர்.

அப்போது உடல் முழுவதும் கருகிய நிலையில் அவர் சடலமாக கிடந்துள்ளார்.

அனிஷாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனை அனுப்பிய போலீசார் கூறுகையில், இறப்பதற்கு முன்னர் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அதில், ஓம் நம சிவாய, இந்த நிலையற்ற உலகில் நான் வாழ விரும்பவில்லை. இந்த உடலை விட்டு என்னுயிர் பிரிந்து சிவபெருமாளுடன் இணைய போகிறது. இதற்கு பார்வதி தேவி தான் அருள் புரிய வேண்டும் என அதில் அவர் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

அனிஷா வீட்டுக்கு வந்தால் தனியறைக்குள் எப்போது சென்று விடுவார் எனவும் கடவுள் மற்றும் மதம் சார்ந்த புகைப்படங்களை தான் எப்போது வரைந்து கொண்டிருப்பார் எனவும் அனிஷாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.