இன்னும் 10 நாள் போராட்டம் நீடித்தால் ஆட்சி களைப்பு? சட்டத்தில் இடமுள்ளதாக தகவல்தமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டை நிரந்தரமாக அனுமதிக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்களை மாணவர்கள் நடத்திவருகின்றனர். அறவழியில் நடந்துவரும் இந்த போராட்டத்தை உலகமே வியந்து பார்க்கிறது.

கடந்த 7 நாட்களாக நடைபெற்றுவரும் இந்த போராட்டங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆதரவு தெரிவித்து, போராட்டங்களிலும் கலந்துகொண்டு வருகின்றனர்.

அறப்போராட்டத்தின் பலனாக தற்போது அவசர சட்டம் மத்திய அரசு பிறப்பித்த நிலையிலும், நிரந்தரமான அனுமதி தேவை என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை மேலும் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு மாவட்டத்திலோ அல்லது மாநிலத்திலோ 15 நாட்களுக்கு மேல் போராட்டங்கள் தொடர்ந்தால் அந்த மாநிலத்தின் ஆட்சியை கலைக்க சட்டத்தில் இடமுள்ளதாக தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவிவருகிறது.

இதனால்தான் மத்திய மாநில அரசுகள் அவசர சட்டத்தை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: http://newstig.com/news/36641/state-government-dismiss-chance