அரசுக்கு எதிராக கொடும்பாவி எரிப்பு போராட்டம் தானே எரிந்த வாலிபர் | The struggle against the state battles burn effigyமாநில  அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் போது வாலிபர் ஒருவர் கொடும்பாவியை எரிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியிலே பணி நிரந்தரம் செய்யகோரி ஆசிரியர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது வாலிபர்  அரசாங்கத்தை கண்டிக்கும் வகையில் நடுரோட்டில் கொடும்பாவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் பெட்ரோல் பட அவரும் தீ பிடித்து எரிந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.