நாளை மதியம் 12.00 மணிக்கு விற்பனைக்கு வரும் நுபியா ஸ்மார்ட்போன்கள்: முழு விவிரம்



புதுடெல்லி:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது பெஸல் இல்லாத ஸ்மார்ட்போன்களை நாளை விற்பனை செய்ய உள்ளது. மொத்தம் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கும் நுபியா ஸ்மார்ட்போன்கள் நுபியா Z11 மற்றும் நுபியா N1 என பெயரிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக நடைபெற இருக்கிறது.

டிசம்பர் 26, மதியம் 12.00 மணியளவில் துவங்க இருக்கும் நுபியா Z11 மற்றும் நுபியா N1 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்..

நுபியா Z11 ஸ்மார்ட்போனினை விலை இந்திய சந்தையில் 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறபம்பசங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. 2.15 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் மெமரியும், 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் மெமரி என இருவித மெமரி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. எனினும் இந்தியாவில் 4GB ரேம் கொண்ட மாடல் மட்டுமே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க நுபியா Z11 ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. கைரேகை ஸ்கேனர் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் மற்றும் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் குவிக் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும் இதன் பேட்டரி பேக்கப் 2.17 நாட்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை டூயல் சிம் ஸ்லாட், 4G LTE, வைபை, ப்ளூடூத், GPS, மற்றும் மைக்ரோ யுஎஸ்பி டைப்-சி வழங்கப்பட்டுள்ளதோடு ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் சார்ந்த நுபியா UI 4.0 வழங்கப்படுகிறது.

மற்ற ஸ்மார்ட்போனான நுபியா N1 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ P10 ஆக்டா கோர் பிராசஸர், 3GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கைரேகை ஸ்கேனர் மற்றும் 5000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த பேட்டரி ஐந்து நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை டூயல் சிம் ஸ்லாட், 4G வோல்ட்இ தொழில்நுட்பம், ப்ளூடூத் 4.1, GPS மற்றும் மைக்ரோ யுஎஸ்பி டைப்-சி மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் சார்ந்த நுபியா UI 4.0 வழங்கப்பட்டுள்ளது.