Breaking

Friday, December 23, 2016

20 ஓவர் போட்டியில் இரு அணிகள் 497 ரன்கள் குவித்து சாதனை ஜெயவர்த்தனே விளாசல் | Otago trump central districts in record 497 run t20

20 ஓவர் போட்டியில் இரு அணிகள் 497 ரன்கள் குவித்து சாதனை ஜெயவர்த்தனே விளாசல்



நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ்  20 ஓவர் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஒட்டாகோ  அணியும், சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் முதலில் ஆடிய ஒட்டாகோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது.அடுத்தாடிய சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்து 1ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதில் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ்  அணிக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே வானவேடிக்கை நிகழ்த்தினார்.

இதில் இரண்டு அணிகளின் ஓட்டங்களையும் சேர்த்துப் பார்க்கையில் 497 ரன்கள் வருகிறது.

இதன் மூலம்கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய போது, இந்திய அணி 244 ரன்களும், மேற்கிந்திய தீவு அணி 245 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இந்த இரண்டு அணிகளின் எண்ணிக்கையை சேர்த்த போது 489 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

தற்போது அந்த முன்னாள் சாதனையான 489 ரன்களை ஒட்டாகோ மற்றும் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணியினர் முறியடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Comment here