பணம் எடுக்க ஏ.டி.எம் வரிசையில் மேலாடை இன்றி நின்ற திருநங்கை பொது மக்கள் அதிர்ச்சி | Transgender woman gets angry with atm queue takes
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பிறகு வங்கிகள் மீண்டும் செயல்பட துவங்கியதில் இருந்து பழைய ரூபாய் தாள்களை மாற்றி புதிய ரூபாய் தாள்களை பெற மக்கள் வங்கிகளில் அலை மோதி வருகின்றனர்.ஏ.டி.எம் மையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் டெல்லியின் சாந்தி சவுன் மயூர் விஹார் பேஸ் 3 பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த திருநங்கை ஒருவர் கோபமடைந்து திடீரென மேலாடையை கழற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், சம்பவயிடத்திற்கு விரைந்த பெண் போலீசார் அவருகு உடை அணிவித்து காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர், அவர் அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு, வரிசையில் நிற்காமல் உடனே பணத்தை எடுத்துச் செல்ல போலீசார் உதவியுள்ளனர்.
No comments:
Post a Comment
Comment here