ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி : ஆண்ட்ராய்டு டூ டிவி..! | Reliance jio launch 4k set top boxes based on android
இந்தியாவில் சூப்பர்-சக்ஸஸ் பெற்றதை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ இப்போது இந்தியாவில் அதன் புதிய 4கே யூஎச்டி செட் டாப் பாக்ஸ்கள் (STBs) தொடங்க களம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இலவச 4ஜி இணைய வசதி வழங்குவதை தொடர்ந்து இந்தியாவில் தனது டிஜிட்டல் ஈக்கோசிஸ்டம் நிர்மாணிக்கும் இலக்கை நோக்கி ரிலையன்ஸ் ஜியோ இரண்டாவது படியை எடுத்துவைக்கிறது என்று நம்பப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இப்போது விரைவில் நாட்டில் புதிய 4கே யூஎச்டி செட் டாப் பாக்ஸ்கள் தொடங்கி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ரிலைஸ்ன் ஜியோ சேவை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
மூன்று வகை
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிவிக்களுக்கான எஸ்டிபி வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் கூட, விலை மற்றும் ஹார்ட்வேர்களில் வேறுபடும் மூன்று வகையான எஸ்டிபி'க்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிராட்காம் சிப்செட்
அதில் ஒன்று பிராட்காம் சிப்செட் மூலம் சக்தியூட்டப்படும் ஹை-எண்ட் எஸ்டிபி'யாகவும், மற்றவைகள் மார்வெல் ப்ராசஸர் கொண்டு சக்தியூட்டப்படும் என்றும் நம்பப்படுகிறது.
டீபால்ட்
புதியவகை அனுபவத்தை நோக்கமாக கொண்ட இந்த திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் ஜியோவின் ஹை-எண்ட் எஸ்டிபி'யானது டீபால்ட் ஆகவே 4கே யூஎச்டி ஆதரவு கொண்டிருக்கும். எனினும், பிக்சர் க்வாலிட்டி பெற பயனர் சிறந்த அனுபவம் வழங்கும் ஒரு 4கே ஆதரவு தொலைக்காட்சி வைத்திருக்க வேண்டும்.
ஸ்மார்ட் டிவி
வெளியான தகவலின்கீழ் ஐவகை எஸ்டிபி'க்கள் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ வெர்ஷன் கொண்டு இயங்கும் என்றும், இணைய இணைப்பு மூலம் எந்தவொரு சாதாரண எல்சிடி/ எல்இடி டிவியையும் ஒரு ஸ்மார்ட் டிவியாக உருமாற்றும் என்றும் நம்பப்படுகிறது.
ப்ரீ இண்ஸ்டால்
இந்த எஸ்டிபிக்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் ப்ரீ இண்ஸ்டால்டாக வரும் போது, ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ டிவி மற்றும் ஜியோ ஆன் டிமாண்ட் உள்ளிட்ட பயன்பாடுகளின் தொகுப்பை வழங்கும்.
விலை
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த எஸ்டிபியின் விலை ரூ.5,500/- இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் |
No comments:
Post a Comment
Comment here