Breaking

Friday, November 4, 2016

இனி கடனுக்காக வங்கியை நம்பியிருக்க வேண்டியதில்லை.. ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் போதும் | No nee to beg from bank get loan through facebook account

கார்ப்பரேட் ஊழியர்களை குறிவைக்கும் புதிய கடன் திட்டம்..!
சென்னை: இன்றைய இளைய தலைமுறையினர் அதிகளவில் சம்பாதித்தாலும் பெரும்பாலானோர் தங்களது நிதியை முறையாகக் கையாளுவதில்லை. இதனால் அவர்களது அதிகக் கடன், சரியாக வங்கிக்குக் கடனை திருப்பிச் செலுத்தாது எனப் பல்வேறு காரணிகளில் அவர்களது கிரேடிட் ஸ்கோர் அதளபதாளத்தைத் தொட்டுவிடும்.

கிரேடிட் ஸ்கோர் குறைந்து விட்டால் வங்கி அதிகாரிகளிடம் தலைகீழாக நின்றாலும் வாங்க முடியாது. வீட்டுக்கடன், வாகனக் கடன், ஏன் மருந்துவச் செலவுகள் போன்ற அவசர தேவைக்குக் கூடக் கடன் பெற முடியாத நிலை உருவாகிவிடும்.

இதற்கெல்லாம் புதிய தீர்வு ஒன்று உருவாகியுள்ளது. CASHe என்னும் மொபைல் ஆப். உங்கள் பேஸ்புக் கணக்கை சரியாக மெயின்டெயின் செய்தால் போது CASHe உங்களுக்குக் கடன் தரும். நம்ப முடியவில்லையா.. அட உண்மையாகத்தான்.

ஆதித்யா

பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரியும் ஆதித்யா(26) தனது வீட்டில் திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்பட, பணம் இல்லாமல் தடுமாறினார். காரணம் அவருக்கு இருந்து குறைவான 'கிரேடிட் ஸ்கோர்'.

கிரேடிட் ஸ்கோர் குறைவாக இருந்த காரணத்தால் எந்த வங்கிகளிலும் அவருக்குக் கடன் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக்கொண்டு இருக்கும்போது. CASHe பற்றி அறிமுகம் அவருக்குக் கிடைத்தது.

CASHe செயலி

இந்த செயலியை பதிவிறக்கம் செய்து தனது பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் லாக்இன் செய்து வங்கி கணக்கு குறித்த விபரங்களைப் பதிவு செய்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் வங்கி கணக்கிற்குப் பணம் வந்தது. தனது குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகளுக்கான பணத்தைப் பெற்றார் ஆதித்யா.

சட்டுன்னு பணம்..!

இதுகுறித்து ஆதித்யா கூறுகையில், CASHe செயலி உங்களது வங்கி கணக்கு மற்றும் கிரேடிட் ஸ்கோர் பற்றி ஆராயவில்லை. உங்களது சேஷியல் ப்ரோபைல் ஆய்வு செய்து கடன் அளிக்கிறது. இதில் வட்டி விகிதம் அதிகம் என்பதால் சிறிய தொகை கடனுக்கு இது ஏதுவாக இருக்கும். இதன் மூலம் நான் 10 முறைக்கு மேல் கடன் வாங்கி இருக்கிறேன் என்று கூறினார்.

எப்படிப் பேஸ்புக் மட்டும்..?

CASHe நிறுவனத்தின் மூலம் நீங்கள் பணம் பெற விரும்பினால் முதலில் உங்களது பேஸ்புக் கணக்கில் இருக்கும் நண்பர்கள் பட்டியல் (Friends list) மற்றும் அவர் பதிவிட்ட பதிவுகளை ஆய்வு செய்யப்படுகிறது. இதனைப் பொறுத்துச் சமுகத்தில் உங்களது நிலையைக் கணக்கிடுகிறது.

இதன் மூலமாகத் தான் உங்களுக்குக் கடன் கொடுக்கலாமா வேண்டாமா.. எவ்வளவு தொகை கொடுக்கலாம் என அனைத்தையும் மதிப்பிடுகிறது.

ரமண குமார்

CASHe நிறுவனத்தின் தலைவரான ரமண குமார், தனது ஹெல்த்கேர் பிபிஓ சிபே சிஸ்டம்ஸ் நிறுனத்தை ஜேபி மோர்கன் ஒன் ஈக்விட்டுப் பார்ட்னர்ஸ் நிறுவனத்திற்கு 1.1 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்து விட்டு இந்நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.

ஜனவரி முதல்..

ஒருவரி கிரேடிட் கார்டு வாங்கவில்லை என்றால் அவர் நம்பத் தகுந்தவராக இருக்கமாட்டார் என்பது முற்றிலும் முறையற்றது, இதன் அடிப்படையில் தான் CASHe நிறுவனம் உருவானது என ரமணக் குமார் கூறினார்.

வருகிற ஜனவரி முதல் சமுக வளத்தளத்தில் பயன்பாட்டின் படி ஒருவரின் கிரேடிட் ரேடிங் மதிப்பிடப்படும் முறையை அறிமுகம் செய்ய உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடனும் வட்டியும்..

CASHe நிறுவனம் துவங்கப்பட்டு 7 மாதங்கள் ஆன நிலையில் தற்போது இந்நிறுவனம் இளம் பட்டதாரிகளுக்கு மட்டும் (கார்பரேட் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும்) குறுகியகாலக் கடன் வழங்கப்படுகிறது.

CASHe நிறுவனத்தின் மூலம் 15-90 நாட்கள் வரையிலான கடன் வழங்கப்படுகிறது, இதற்கு 30-36 சதவீதம் வரையிலான வட்டி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகச் சோஷியல் கிரேடிட் ரேடிங் கொண்டவர்களுக்கு 15 சதவீதம் என்ற வட்டியும் கடன் வழங்கியுள்ளது கிரேடிட் CASHe. கடன் பெறும் வாய்ப்பும் இரட்டிப்பாக இருக்கும்.

வர்த்தகம்

நிறுவனம் துவங்கி 7 மாதங்களே ஆன நிலையில் 10,000 வாடிக்கையாளர் தொடர்ந்து இந்நிறுவனத்தின் வாயிலாகக் கடன் பெற்று வருகின்றனர். தினமும் இந்நிறுவனம் 20 லட்சம் ரூபாய் அளவிலான கடன் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் பெற இது தேவை..

ஆர்பிஐ அறிவுறுத்தல்கள் படி கடன் பெறும் முன் பான்கார்டு, ஆதார் கார்டு, பே ஸ்லிப், வங்கி அறிக்கைகள் ஆகியவற்றைச் சமர்ப்பித்த பிறகே கடன் அளிப்பதற்கான பணிகள் துவங்குகிறது CASHe.

பணப் பட்டுவாடா

மேலும் இதன் மூலம் கடன் பெறும் அனைவருக்கும் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட ஒன் கேபிடல் என்னும் NBFC நிறுவனத்தின் வாயிலாகத் தான் செல்கிறது. ஒன் கேபிடல் நிறுவனத்தின் தலைவரும் ரமணக் குமார் தான்.

எங்களது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய இதை கிளிக் செய்யவும்..!

No comments:

Post a Comment

Comment here