ரஜினி காந்துக்கு பதில் டுவீட் செய்த பிரதமர் மோடி | Narendra modi replay rajinikanth
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த அதிரடி நடவடிக் கையால், கோடிக்கணக்கில் பணம் புரளும் திரைப்படத் துறை பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவியது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு சினிமாவை சேர்ந்த பலர் ஆதரவு தெரிவித்து உள் ளனர்.
பிரதமரின் திடீர் நட வடிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கும் கருத்துக்களை ரஜினிகாந்த், குஷ்பு உள்பட பலர் தெரிவித்து இருக் கிறார்கள். அதன் விபரம் வருமாறு:-
நடிகர் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘நரேந்திரமோடி ஜி’ க்கு வாழ்த்துக்கள். புதிய இந்தியா பிறக்கிறது. ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்து மோடி ரஜினிகாந்த்துக்கு டுவீட் செய்துள்ளார்.
அதில், உங்கள் வாழ்த்துக்கு நன்றி. நாம் அனைவரும் சேர்ந்து வளமான, ஊழலற்ற இந்தியாவை உருவாக்க சேர்ந்து பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.
Thank you. All of us have to work shoulder to shoulder and create a prosperous, inclusive and corruption free India. https://t.co/3rurQwFYja
— Narendra Modi (@narendramodi) 9 November 2016
No comments:
Post a Comment
Comment here