Breaking

Tuesday, November 8, 2016

மாட்டிறைச்சி என்ற பெயரில் மனித இறைச்சியை ஏற்றுமதி செய்யும் சீனா… அதிர்ச்சி புகைப்படங்கள்!

மாட்டிறைச்சி என்ற பெயரில் மனித இறைச்சியை ஏற்றுமதி செய்யும் சீனா… அதிர்ச்சி புகைப்படங்கள்!




சீனா என்றாலே பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும். தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து உணவு உற்பத்தி வரை உலகெங்கிலும் போலிகளின் அரசனாய் திகழ்கிறது சீனா. சமீப காலமாக உணவுகளில் போலி தயாரிப்பை சீன உணவு மற்றும் சுகாதார அமைச்சகம் மிகக் கறாராக கண்காணித்து வருகிறது.

ஆனால், சில வாரங்களுக்கு முன்பு, மாட்டிறைச்சி என்ற பெயரில் இறந்த மனித உடல் உறுப்புகளை ஆப்ரிக்காவிற்கு சீனா ஏற்றுமதி செய்தது என தென் ஆப்பிரிக்க நாடான சாம்பியா நாட்டு பத்திரிக்கையில் வெளியான புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் எங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் இறைச்சி உலகெங்கிலும் இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில், தென் ஆப்ரிக்கா நாடான சாம்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறைச்சியில் மனித உடல் உறுப்புகள் கலப்படம் செய்துள்ளனர் என அந்நாட்டு சாம்பியா போஸ்ட் எனும் பத்திரிகையில் புகைப்படங்கள் வெளியாகின.

உலக மக்கள் தொகையில் பெரும் பங்கு கொண்டுள்ள சீனா, இறந்தவர்களின் சடலங்களை என்ன செய்வதென்று தெரியாமல் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறதா? என அந்நாட்டு பத்திரிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்த சீன தூதர் யாங் யூமிங் கேன்களில் அடைத்து மாட்டிறைச்சியை தான் சீனா சாம்பியாவிற்கு ஏற்றுமதி செய்து வந்தது. இது வியப்பையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இதுக் குறித்து விசாரணை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இதுக்குறித்து உரிய அமைச்சகத்துடன் விசாரணை நடத்த சாம்பியா அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. உலக நாடுகள் மத்தியிலும், சமூக ஊடக பயனாளிகள் மத்தியிலும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது போலியானவை. உண்மையான புகைப்படங்கள் அல்ல. நாங்கள் மனித இறைச்சியை ஏற்றுமதி செய்யவில்லை என கூறியுள்ளது. மேலும், சீனா சாம்பியா மத்தியிலான ஆரோக்கியமான உறவிற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் யாரோ செய்த பித்தலாட்டம் இது என சீனா பதிலளித்துள்ளது.

இறந்த மனித உடல் உறுப்புகளை தவறுதலாக உண்டாலும் கூட தீய பாக்டீரியா தாக்கங்கள், வைரஸ் தொற்று மற்றும் கொடிய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்புகள் உள்ளன. மேலும், இதனால் உண்டாகும் வைரஸ் தொற்றால் மூளையில் பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

நரமாமிசம் உண்டு வாழ்ந்து வரும் மனிதர்களும் இருக்கின்றனர். ஆனால், நேரம் கடந்து உண்டால் கோழி, ஆடு இறைச்சி கூட விஷம் ஆகும் தன்மை கொண்டுள்ளது. இது மனித இறைச்சிக்கு விதிவிலக்கு அல்ல.

No comments:

Post a Comment

Comment here