Breaking

Thursday, November 17, 2016

எந்த ஏடிஎம் இயந்திரங்களில் பணம் உள்ளது என்பது தெரிய புதிய இணையதளம் அறிமுகம் | Atm machine new webiste launched

எந்த ஏடிஎம் இயந்திரங்களில் பணம் உள்ளது என்பது தெரிய புதிய இணையதளம் அறிமுகம் | Atm machine new webiste launched



கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. புதிய 2,000, 500 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகத்திற்கு வந்துள்ளன. புழக்கத்திற்கு வந்துள்ள ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், அனைத்து ஏடிஎம்களிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு வருவதால் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் ஏமாற்றதுடன் திரும்புகின்றனர்.

இந்த சிரமத்தை நீக்கவும் பொதுமக்கள் வசதிக்காகவும் எந்தெந்த இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எந்தெந்த இடங்களில் எந்தெந்த வங்கி ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பாட்டிலுள்ளது என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள http://atmkaro.in என்ற இணையதளம் வடிவமைக்கபட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment

Comment here