பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை என்ன செய்ய போகிறது தெரியுமா ஆர்.பி.ஐ? | Old currency notes 500 and 1000 can never be reconstructed rbi
டெல்லி: திரும்பப்பெறப்படும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அவை மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதையடுத்து புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு கொண்டு வரப்பட்டு மக்களிடம் இருந்து பழைய நோட்டுகளை பெற்று புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மக்களிடம் இருந்து பெறப்படும், செல்லாத 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு விளக்கமளித்துள்ள ரிசர்வ் வங்கி பழைய நோட்டுகள் புணரமைக்க முடியாத அளவுக்கு அழிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் திரும்பப்பெறப்படும் 5000 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ட்ரக்குகளில் ஓரிடத்துக்கு கொண்டுவரப்படும்.
அவை துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஈர மூரட்டப்படும் என்றும் பின்னர் கட்டிகளாக மாற்றப்பட்டு அவை ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டிகள் ஒப்பந்தகாரர்களிடம் வழங்கப்பட்டு நிலத்தை நிரப்பும் பணிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரே கட்டமாக முடியாது என்றும் பல கட்டங்களாக இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இநதியாவில் கடந்த மார்ச் மாதம் மொத்தம் 15, 707 மில்லியன் 500 ரூபாய் நோட்டுகளும் 6,326 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Comment here