Breaking

Friday, October 28, 2016

கோயம்பேட்டில் பரபரப்பு காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் சரமாரி கத்திகுத்து; வாலிபர் கைது | Young woman with a knife stab

கோயம்பேட்டில் பரபரப்பு காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் சரமாரி கத்திகுத்து; வாலிபர் கைது | Young woman with a knife stab




சென்னை,

சென்னை  அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.  காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி (25).

இவர் நேற்று இரவு 10 மணி அளவில் கோயம்பேடு 100 அடி ரோட்டில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் சிவரஞ்சனியை வழிமறித்து பேசினார். ஆனால் சிவரஞ்சனியோ அந்த வாலிபரை உதாசீனப் படுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதன் பிறகும் வலுக்கட்டாயமாக அந்த வாலிபர் பின்னால் சென்று மீண்டும் வழிமறித்து  பேசினார். திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக சிவரஞ் சனியின் முகத்தில் குத்தினார். இதில் அவரது வாயில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இதனால் அலறி துடித்த படியே சிவரஞ்சனி, கீழே சாய்ந்தார். இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் வாலிபர் தப்பி ஓடி விட்டார். பின்னர் சிவரஞ்சனி சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சிவரஞ்சனியிடமும் விசாரணை  நடத்தப்பட்டது.

அப்போது ஒருதலை காதல் காரணமாக சிவரஞ்சனியை அரவிந்தன் என்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது.தப்பி ஓடிய அரவிந்தனை போலீசார் தேடி வந்தனர். கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் பதுங்கி இருந்த அவர் சம்ப வம் நடந்த சில மணி நேரத் திலேயே பிடிபட்டார்.

சிவரஞ்சனியை விரட்டி விரட்டி காதலித்ததாகவும், ஆனால் அவர் காதலை ஏற்றுக் கொள்ளாமல் அவ தூறாக பேசி விலகி சென்ற தாலும் ஆத்திரத்தில் இது போன்று செய்து விட்டதாக கூறினார்.இது தொடர்பாக அரவிந் தன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-


திருப்பூரைச் சேர்ந்த நான் கிண்டியில் தங்கி இருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தேன். அதே நிறுவனத்தில் வேலை செய்த சிவரஞ்சனியை எனக்கு மிகவும் பிடிக்கும்.நான் அவரை காதலிக்க தொடங்கினேன். இதனை சிவரஞ்சனியிடமே நேரில் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் எவ்வளவோ பின்னால் சுற்றி வற்புறுத்தியும் எனது காதலை சிவரஞ்சனி புறக் கணித்தார்.

நான் அடிக்கடி சிவரஞ்சனியை சந்தித்து காதலை சொல்லிக் கொண்டே இருந்ததால், வேலையை விட்டு அவர் நின்று விட்டார். இதனால் அவரை பார்க்க முடியாமல் மிகவும் கஷ்டப் பட்டேன்.

இதன் பின்னர் சிவரஞ்சனி, குழம்பு மசாலா பொடிகளை தயாரிக்கும் பிரபல நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். கோயம்பேட்டில் வைத்து பலமுறை அவரை பார்த்துள் ளேன்.
கோயம்பேட்டில் வைத்து அவரை பார்த்த தான் நேரில் சென்று பேசி காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தினேன். ஆனால் அப்போதும் சிவரஞ்சனி என்னை அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரத்தில்முகத்தில் கத்தியால் குத்தினேன். இவ்வாறு அரவிந்தன் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரி விக்கப்பட்டது.

இதற்கிடையே கீழ்ப்பாக் கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவரஞ்சனி, சிகிச்சைக்கு பின்னர் நேற்று இரவு 11.30 மணி அளவில் வீடு திரும்பினார். நல்ல வேளையாக அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.

No comments:

Post a Comment

Comment here