Breaking

Tuesday, October 11, 2016

இந்திய அணிக்கு கிடைக்க போகும் மிகப் பெரிய கவுரவம் கோலிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் Kohli-to-be-presented-with-Test-mace-in-Indore

இந்திய அணிக்கு கிடைக்க போகும் மிகப் பெரிய கவுரவம் கோலிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்




இந்திய அணிக்கான நம்பர் 1 கேடயத்தை விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணியிடம் இருந்த நம்பர் 1 இடத்தை இந்திய அணி பறித்தது.

ஆனால் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் ஐசிசி  வெளியிடவில்லை. இதற்கான அறிவிப்பை ஐசிசி தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணி தொடர் முடிந்தவுடன் அறிவிக்க உள்ளது.

இதனால் நம்பர் 1 இடத்தை பிடித்தற்கான கதாயுதம் போன்ற கோப்பை யை ஐசிசி இந்திய அணிக்கு அளிக்க உள்ளது.

ஆனால் இக்கதாயுதம்  தற்போது இந்தூரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படி கவாஸ்கர் இந்திய அணிக்கான நம்பர் 1 கேடயத்தை வழங்கினால் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும், இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராட்கோலிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனவும் கூறப்படுகிறது.

இந்தூர் டெஸ்ட் போட்டி நிலவரம்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வீராட் கோலி இரட்டை சதமும் (211 ரன்), ரகானே சதமும் (188 ரன்) அடித்தனர். போல்ட், ஜித்தன் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி சுழற்பந்து வீரர் அஸ்வினின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 90.2 ஓவர்களில் 299 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.

தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் 72 ரன்னும், ஜேம்ஸ் நீசம் 71 ரன்னும், டாம் லாதம் 53 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

அஸ்வின் 81 ரன் கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றி முத்திரை பதித்தார் . அவர் 20-வது தடவையாக 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி சாதனை புரிந்தார். ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட் எடுத்தார்.

நியூசிலாந்து அணி பாலோ ஆனை தவிர்க்க 358 ரன் எடுக்க வேண்டும். அந்த அணி 59 ரன் குறைவாக எடுத்ததால் ‘பாலோஆன்’ நிலையை எட்டியது. ஆனால் இந்திய அணி கேப்டன் வீராட் கோலி ‘பாலோ ஆன்’ கொடுக்கவில்லை.

258 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன் எடுத்து இருந்தது. முரளி விஜய் 11 ரன்னிலும், புஜாரா 1 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். காம்பீர் 6 ரன்னில் இருந்த போது காயம் அடைந்தார்.

இன்று (செவ்வாய்க் கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 276 ரன்கள் முன்னிலை கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது.

ஆட்டம் தொடங்கிய 8-வது ஓவரில் இந்தியாவின் முதல் விக்கெட் சரிந்தது. முரளிவிஜய் 19 ரன் எடுத்து இருந்தபோது ரன்அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 34 ஆக இருந்தது.

நேற்றைய ஆட்டத்தின் போது தோள்பட்டை காயத்தால் பாதியில் விலகிய காம்பீர் அடுத்து களம் வந்தார். 17.3-வது ஓவரில் இந்திய அணி 50 ரன்னை தொட்டது.

காம்பீரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு விளையாடும் அவர் அரை சதம் அடித்து முத்திரை பதித்தார். 54 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 57-வது டெஸ்டில் விளையாடும் காம்பீருக்கு இது 22-வது அரை சதமாகும்.

50 ரன்னை எடுத்த உடன் அவர் ஆட்டம் இழந்தார். காம்பீரின் விக்கெட்டை ஜித்தன் பட்டேல் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 110 ஆக இருந்தது.

அடுத்து கேப்டன் வீராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் இருந்த புஜாரா 96 பந்துகளில் 50 ரன்னை தொட்டார். அவருக்கு 11-வது அரை சதமாகும்.

மதிய உணவு இடை வேளையின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து இருந்தது.

முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் 385 ரன்களுடன் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. புஜாரா 50 ரன்னிலும், கோலி 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்

No comments:

Post a Comment

Comment here