Breaking

Tuesday, October 25, 2016

அடுத்த ஆண்டு மார்ச் வரை இலவச சேவையை தொடருகிறது ரிலையன்ஸ் ஜியோ? | Jio 4g may remain free until march 2017 report

அடுத்த ஆண்டு மார்ச் வரை இலவச சேவையை தொடருகிறது ரிலையன்ஸ் ஜியோ? | Jio 4g may remain free until march 2017 report




ஏர்டெல் நிறுவனம் நாடு முழுவதும் 4G இண்டர்நெட் சேவையை துவங்கி வழங்கிவரும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கபட்ட ஜியோ என்னும் 4 ஜி சேவையை அண்மையில் துவங்கியது. ஜியோ சேவை துவங்கியதையடுத்து வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக  சில முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் டேடா கட்டணத்தை கணிசமான அளவில் குறைத்தன.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் டிசம்பர் 3 ஆம் தேதியுடன் ஜியோ இலவச சேவை முடிவடைவதாக டிராய் அறிவித்தது. இது ஜியோ பயனாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலவச சேவையை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஜியோ பயனாளர்கள் 4 ஜி சேவையை  ஒருநாளைக்கு 4 ஜிபி வரை இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment

Comment here