உணவு பட்டியலை பேஸ்-புக்கில் வெளியிட்ட பிரபல நடிகை: மனித உரிமை ஆணையம் நோட்டீசு
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு பிரபல மலையாள நடிகை அனுஸ்ரீ சென்றிருந்தார். அவருடன் அவரது தோழி ஒருவரும் சென்றார். அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பப்ஸ் சாப்பிட்டு காபி குடித்தனர். அதற்கான பில் வந்த போது பணம் கொடுப்பதற்காக அதை பார்த்த நடிகை அனுஸ்ரீ அதிர்ச்சி அடைந்தார். காரணம் 2 சிக்கன் பப்சின் விலை ரூ.500, காபி ரூ.100, பால் இல்லாத காபி ரூ.80 என்று ரூ.680-க்கு பில் வந்திருந்தது.
இதுபற்றி அவர் அந்த உணவகத்தில் உள்ளவர்களிடம் கேட்ட போது யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை. மேலும் அந்த உணவகத்தில் உள்ள உணவுகளின் விலை பட்டியலும் அங்கு வைக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து தான் தோழியுடன் பப்ஸ் சாப்பிட்டதற்கான விலை பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை நடிகை அனுஸ்ரீ வெளிப்படுத்தியிருந்தார்.
இதை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த செபின் என்பவர் பார்த்தார். இதுபற்றி அவர் மனித உரிமை ஆணையத்தில் புகாரும் செய்தார்.
இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம் விமான நிலைய இயக்குநர், உணவக மேலாளர், நுகர்வோர் துறை செயலாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment
Comment here