Breaking

Wednesday, October 5, 2016

காதலிக்கும் பெண்ணை சந்திக்க வந்தவரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை!

காதலிக்கும் பெண்ணை சந்திக்க வந்தவரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை!



திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே, காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவிலை அடுத்த மேல இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணப் பெருமாளின் மகள் கஸ்தூரி, செங்கோட்டையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திண்டுக்கலில் படித்துபோது,  அங்கு செட்டிநாயக்கர்பட்டியை சேர்ந்த சிவகுருநாதன் என்பவருடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சிவகுருநாதன் அடிக்கடி கஸ்தூரியின் ஊருக்கு வந்து அவரை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை மேலஇலந்தைகுளம் கிராமத்தில் கஸ்தூரியை பார்ப்பதற்காக சிவகுருநாதன் தனது நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார்.

இதை அறிந்த 3 பேர் கொண்ட கும்பல் சிவகுருநாதனை ஒட ஓட விரட்டியது. அவர் கும்பலிடம் இருந்து தப்பி அங்குள்ள அய்யாவழி கோயிலுக்குள் புகுந்தபோது, அவரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.

இதில் சிவகுருநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது சாதி ஆணவக் கொலையா  என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Comment here