மக்களால் ஒதுக்கபட்டவர் இன்று உயரத்துக்கு போனார் | Assign people person today went to the heights
உகாண்டா சேர்ந்தவர் காட்ப்ரே (47). இவர் பிறக்கும்போதே வினோத தலை, குள்ள உருவம், கோர முகம் என ஒரு வித ஊனத்துடன் பிறந்துள்ளார். இவரின் உருவத்தை பார்த்து பலர் கேலி, கிண்டல் செய்து ஒதுக்கி வைத்துள்ளனர். இவருக்கு சிறு வயதில் இருந்தே பாடுவதில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது கடின முயற்சியால் இன்று உகாண்டாவில் பிரபல பாப் பாடகராக திகழ்ந்து வருகிறார்.
இது பற்றி காட்ப்ரே பாகுமா கூறும்போது:-
நான் இப்படி பிறந்தததால் சிறுவயதில் இருந்தே என்னை எல்லோரும் விநோதமாக பார்க்க ஆரம்பித்தார்கள். அது எனக்கு பின்னர் பழகி விட்டது. எனக்கு சிறுவயதில் இருந்தே இசையில் ஆர்வம் அதிகம்.என் திறமையை பார்த்து பலர் எனக்கு பாட வாய்ப்பு வழங்கினார்கள். பின்னர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் என் மனைவி என்னை விட்டு போய் விட்டார்.
பிறகு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இசைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இசை துறையில் நான் நிறைய சாதிப்பேன் என்றார்.
No comments:
Post a Comment
Comment here