Breaking

Friday, October 7, 2016

கண்ணாம்மூச்சி விளையாடிபோது சுவற்றின் நடுவில் சிக்கிய சிறுவன் 7 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு

கண்ணாம்மூச்சி விளையாடிபோது சுவற்றின் நடுவில் சிக்கிய சிறுவன் 7 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு



ஆந்திர மாநிலம் “கடப்பா மாவட்டம் புலுகுண்டா கிராமத்தை சேர்ந்த சிறுவன் பரூக் ( வயது 6).  கால் பரீட்சை விடுமுறைக்காக சிந்தாகுண்டா வாலைபள்ளியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தான்

அங்கு  பாட்டி வீட்டை சுற்றி உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடில் விளையாடினான். அப்போது பரூக் அங்குள்ள இரண்டு வீட்டின் சுவர் நடுவில் ஒளிந்து கொள்ள சென்றுள்ளான். சிறிய இடைவெளி என்பதால் சுவரில் பரூக் நுழைந்தபோது அவனது உடல் சுவர் இடுக்கில் சிக்கி கொண்ட காரணத்தால் அவனால் வெளியே வர முடியவில்லை. அவன் கூச்சல் போட்டும் யாருக்கும் கேட்கவில்லை.

3 மணி நேரத்துக்கு பிறகும் பரூக்கை காணாத உறவினர்கள் அவனைதேடிய போதுதான் அவன் சுவரின் நடுவில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் வீட்டின் சுவரை “டில்லர் கருவி” மூலம் உடைத்து 4 மணி நேரம் போராடடி சிறுவனை மீட்டனர்.

No comments:

Post a Comment

Comment here