Breaking

Tuesday, October 11, 2016

பிளஸ்-2 படித்தவர்களுக்கு மத்திய அரசில் 5134 பணிகள்

பிளஸ்-2 படித்தவர்களுக்கு மத்திய அரசில் 5134 பணிகள்



பிளஸ்-2 படித்தவர் களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கிளார்க் வேலைக்கு தேர்வு அறிவித்து உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கிளார்க் (கிரேடு- சி) பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்ய எழுத்து தேர்வை அறிவித்துள்ளது. கம்பைன்ட் ஹையர் செகண்டரி லெவல் (10+2) எக்ஸாமினேசன்-2016 என்ற தேர்வின் மூலம் மொத்தம் 5 ஆயிரத்து 134 பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன.

பிரிவு வாரியான பணி விவரம்:

1. போஸ்டல் அசிஸ்டன்ட்/சோர்டிங் அசிஸ்டன்ட் : 3281 பேர்
2. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 506 பேர்
3. லோயர் டிவிசன் கிளார்க் - 1321 பேர்
4. கிளார்க் : 26 பேர்

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-1-1990 மற்றும் 1-1-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-1-2017-ந் தேதியை அடிப்படையாக கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகின்றன. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

கல்வித் தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேல்நிலைக் கல்வி (12-ம் வகுப்பு) அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தட்டச்சுத்திறன் தகுதியாக கோரப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பித்தவர்கள் எழுத்து தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களில் டேட்டா என்ட்ரி மற்றும் கிளார்க் பணி விண்ணப்பதாரர்கள் தட்டச்சு/ திறமைத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 செலுத்தி கட்டணம் செலுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப்பிரதி எடுத்து தேவையான சான்றுகளை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி நாள் : 7-11-2016
தேர்வு நடைபெறும் நாட்கள்: 7-1-2017, 5-2-2017, 9-4-2017

ஜூனியர் என்ஜினீயர் பணிகள்

இதேபோல ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கான ‘ஜூனியர் என்ஜினீயர் எக்சாம்-2016’ எனும் தேர்வையும் எஸ்.எஸ்.சி. அமைப்பு அறிவித்துள்ளது. மத்திய குடிநீர் ஆணையம், தபால் துறை, மிலிட்டரி என்ஜினீயரிங் சர்வீஸ் பிரிவு, மத்திய நீர்மின் ஆராய்ச்சி நிலையம், கடற்படை, மத்திய வட்டார வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பில்டிங் அண்ட் குவான்டிட்டி சர்வே போன்ற பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு கணிசமான பணியிடங்கள் உள்ளன. சிலதுறை பணிகளுக்கு என்ஜினீயரிங் பட்டப்படிப்பு தகுதியாக கேட்கப்பட்டுள்ளது. அந்தந்த பிரிவுக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பார்ட்-1 விண்ணப்பம் 28-10-2016-ந் தேதிக்குள்ளும், பார்ட்-2 விண்ணப்பம் 31-10-2016-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவும், இவை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ssconline.nic.in என்ற இணைய தளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Comment here