இனிமேல் தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட திறந்து விடக்கூடாது குமாரசாமி வலியுறுத்தல்
பெங்களூரு,
தமிழகத்திற்கு காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 5-ந் தேதி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வருகிற 20-ந் தேதி வரை தினமும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடும்படி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்-மந்திரி சித்தராமையாவுடன் நாங்கள் இருக்கிறோம். இனிமேல் தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட திறந்து விடக்கூடாது. இந்த விஷயத்தில் மாநில அரசு சரியான முடிவை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கர்நாடக மக்களை உசுப்பேற்றுகிறார்கள். இது நடைபெறக்கூடாது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
No comments:
Post a Comment
Comment here