Breaking

Friday, September 9, 2016

ஐசியூவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் கைது

ஐசியூவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் கைது



காந்திநகர்,

குஜராத்தில் மருத்துவமனை ஐசியூவில் டெங்கு காய்ச்சல் நோயாளியை பாலியல் பலாத்காரம் செய்த அப்பல்லோ டாக்டர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

காந்திநகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று டெங்கு காய்ச்சல் பாதிப்புக்காக 21-வயது பெண் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவமனையின் ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண்ணை டாக்டர் மற்றும் மருத்துவமனை பணியாளர் ஒருவர் இரண்டு நாட்கள் பாலியல் பாலாத்காரம் செய்து உள்ளனர். ஐசியூவில் சேர்க்கப்பட்டு உள்ள நோயாளியை வெளிநபர்கள் பார்க்க மருத்துவமனையில் உள்ள தடைஉள்ளது. டாக்டர் ரமேஷ் சவுகான் (வயது 28) ஞாயிறுயன்று இரவு பணியில் இருந்தபோது முதல்முறையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்னதாக பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மருத்துவமனை வார்டு பாயையும் போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதனை செய்ததில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதிகளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது, முடியாத நிலையில் நேற்று தன்னுடைய மாமாவிடம் நடந்த சம்பவத்தை கூறிஉள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரி சந்தீப் ஜோஷி பேசுகையில், “நாங்கள் போலீஸ் விசாரணைக்கு முழுவதுமாக ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். விசாரணை நடைபெற்று வரும்நிலையில் நாங்கள் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை,” என்று கூறிஉள்ளார்.

No comments:

Post a Comment

Comment here