Breaking

Saturday, September 3, 2016

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத்துக்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு?

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத்துக்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு?



புதுடெல்லி,


இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் யோகேஷ்வர் தத். லண்டனில் 2012&ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இவர் 60 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார்.

இதற்கிடையே லண்டன் ஒலிம்பிக்கில் இதே பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற ரஷிய வீரர் பெசிக் குடு கோவ் ஊக்க மருந்து பயன் படுத்தி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதை    தொடர்ந்து யோகேஷ்வர் தத்தின் வெண்கல பதக்கம் வெள்ளிப் பதக்கமாக தரம் உயர்த்தப்பட்டது. பெசிக்குடு கோவ் 2013-ல் கார் விபத்தில் மரணம் அடைந்து இருந்தார்.
இந்த வெளளிப் பதக்கம் ரஷிய வீரர் குடும்பத்தினரி டமே தொடர்ந்து இருக்கட்டும் என்று யோகேஷ்வர் தத்  கூறி இருந்தார்.

இந்த நிலையில் யோகேஷ் வர் தத்துக்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.லண்டன் ஒலிம்பிக்கில் 60 கிலோ பிரிவில் அசர் பெய்ஜான் மல்யுத்த வீரர் டோக்ருல் அஸ்சுரோவ் தங்கம் வென்றார். அவர் குடு கோவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். தங்கம் வென்ற அஸ்க ரோவ் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் அவரது தங்கப் பதக்கம் பறிக்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப் பூர்வமாக தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தங்கம் வென்ற அசர்பெய் ஜான் வீரர் ஊக்க மருந்தில் சிக்கியதால் யோகேஷ்வர் தத்துக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கிடைத்தால் அபினவ் பிந்தரராவுக்கு பிறகு ஒலிம் பிக்தனி நபர் பிரிவில் தங்கம் வெல்லும் 2-வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

அதே நேரத்தில் யோகேஷ் வர் தத்துக்கு விதிமுறைப்படி தங்கம் கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் ரீபேஜ் முறையில் தான் வெண்கலம் வென்று இருந்தார். அமெரிக்க வீரர் கோல்மேனும் இந்த பிரிவில் வெண்கலம் வென்று இருந்தார். கோல்மேன் அரை இறுதியில் அசர்பெய்ஜான் வீரரிடம் தோற்று இருந்தார். யோகேஷ்வர் தத்துக்கு தங்கம் கிடைக்குமா? என் பது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், சர்வதேச மல்யுத்த சம்மேளன முடிவுக்கு பிறகு தெரியவரும். டெக்னிக்கல் விதிப்படி இதுபற்றி முடிவு மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment

Comment here