Breaking

Monday, September 12, 2016

துப்பாக்கி சூட்டில் பலியானவர், பெட்ரோல் பங்க் ஊழியர் விசாரணையில் பரபரப்பு தகவல்

துப்பாக்கி சூட்டில் பலியானவர், பெட்ரோல் பங்க் ஊழியர் விசாரணையில் பரபரப்பு தகவல்



பெங்களூரு,

பெங்களூரு ராஜகோபால் நகர் அருகே லக்கரே சர்க்கிளில் கன்னட அமைப்பை சேர்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் போலீஸ் ரோந்து வாகனத்திற்கு தீவைத்தனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியானவர் பற்றி போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பெங்களூரு ஹெக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் உமேஷ் (வயது 25). இவரதுசொந்த ஊர் துமகூரு மாவட்டம் குனிகல் ஆகும். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். திருமணத்திற்கு பிறகு உமேஷ், குடும்பத்துடன் ஹெக்கனஹள்ளியில் தங்கியிருந்து பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து பலியாகியுள்ளார். தற்போது உமேசின் மனைவி 7 மாத கர்ப்பமாக இருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Comment here