Breaking

Saturday, September 3, 2016

கேப் கெனவரல் ஏவுதளத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து நாசம், பேஸ்புக் நிறுவனத்தின் செயற்கைக்கோளும் எரிந்தது

கேப் கெனவரல் ஏவுதளத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து நாசம், பேஸ்புக் நிறுவனத்தின் செயற்கைக்கோளும் எரிந்தது 




அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவப்பட இருந்தநிலையில் வெடித்து நாசமாகியது.

புளோரிடாவில் உள்ள கேப் கெனவரல் ஏவுதளத்தில் பரிசோதனைக்காக செங்குத்தாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் வெடித்து எரிந்தது. வியாழன் அன்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் சனிக்கிழமை விண்ணில் ஏவப்பட இருந்த செயற்கைக்கோள் எரிந்து நாசமாகியது. ராக்கெட் வெடிப்பு காரணமாக யாரும் காயம் அடையவில்லை என்றும் இது ஒரு முரண்பாடான சம்பவம் என்றும் ஸ்பேஸ் எக்ஸ் கூறிஉள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் சிஇஒ இலான் மாஸ்க் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில்,

ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்ட போது வெடிப்பு சம்பவம் நடைபெற்றது என்றும் ஆனால் ராக்கெட் வெடிப்பிற்கான காரணம் என்னவேன்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

பேஸ்புக் (FB, Tech30) நிறுவனம் பயன்படுத்தும் செயற்கைக்கோளை ராக்கெட் தாங்கியிருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விண்கலம் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வடிவமைக்கப்பட்டது. ஆப்ரிக்க நாடுகளில் பேஸ்புக் பயன்பாட்டை விஸ்தரிக்கும் வகையில் அதிவேக இணையதள வசதியை வழங்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனம் இந்த செயற்கைக்கோளை நிலைநிறுத்த முயற்சிசெய்தது. இதற்காக பேஸ்புக் நிறுவனம் பிரான்ஸின் இயூடெல்சாட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் பாட்னர்ஷிப் கொண்டது. அமோஸ் 6 என்று அழைக்கப்பட்ட செயற்கைக்கோள் இஸ்ரேலிய நிறுவனமான ஸ்பேஸ்காமிற்கு சொந்தமானது.

ஆப்ரிக்காவில் பயணம் மேற்கொண்டு உள்ள பேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பர்க் வெளியிட்டு உள்ள செய்தியில், ”ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்ததில், எங்களுடைய செயற்கைக்கோள் நாசமாகியது என்பதில் மிகவும் வருத்தம் அடைந்தேன்,” என்று கூறிஉள்ளார். வியாழன் காலை 9:07 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து உள்ளது. ராக்கெட் வெடித்து எரிந்ததினால் அப்பகுதியே கரும் புகை மூட்டமாக காணப்பட்டது. வெடிப்பு காரணமாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் அச்சத்திற்கு உள்ளாகினர். கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 25 ராக்கெட்களை விண்ணிற்கு ஏவிஉள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செயற்கைக்கோள்கையும் அனுப்பிஉள்ளது.

No comments:

Post a Comment

Comment here