வங்கதேசத்தில் 80 வயது மதிக்கத்தக்க தோற்றத்துடன் பிறந்த குழந்தை
வங்காள தேசம் புல்பாரியா கிராமத்தை சேர்ந்த பாருல் பாட்ரோ மற்றும் பிஸ்வஜித் பாட்ரோ தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
இக்குழந்தையின் முகம், மற்றும் தோல் ஆகிய அனைத்தும் சுருங்கிய நிலையில், முதிர்ச்சி தோற்றத்துடன் பிறந்துள்ளது.கண்கள் மட்டும் பெரிதாக இருந்து உள்ளது. குழந்தியை பார்க்கும் போது 80 வயது மதிக்கதக்க தோற்றம் உள்ளது.
புரோகேரியா சிண்ட்ரம் (Progeria Syndrome) என்ற குறைபாட்டின் காரணமாகவே இக்குழந்தை இவ்வாறு பிறந்துள்ளது, அதாவது இது பரம்பரரை நோய் ஆகும். இக்குழந்தையின் தந்தை இளம் வயதில் முதியவர் போன்று தோற்றமளித்தால் அதே குறைபாடு இவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் ஏற்படும்.
அதாவது, உடலில் உருவாகும் அசாதரண புரோட்டின்களை, உடலில் உள்ள செல்கள் பயன்படுத்திக்கொள்கையில் இந்த குறைபாடு ஏற்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 4 மில்லியன் குழந்தைகள் இதுபோன்ற குறைபாட்டால் பிறக்கின்றனர்.
No comments:
Post a Comment
Comment here