விமானங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போன் பயன்படுத்த தடை
புதுடெல்லி,
முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாம்சாங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 செல்போனை விமானத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 7 போனின் பேட்டரி எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதால், அதனை ஆஃப் செய்துகொண்டு பயணிக்குமாறு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்ககம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. விமானத்தில் சார்ஜ் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் சாம்சங் போனுக்கு விமானத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும், கேலக்ஸி நோட் 7 போன்களின் பேட்டரி தீப்பிடிப்பதாக புகார் எழுந்ததையடுத்து, அதனை திரும்பப்பெறுவதாக சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Comment here