Breaking

Sunday, September 25, 2016

ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்பட உதவும் 16 தாரக தந்திரங்கள்

ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்பட உதவும் 16 தாரக தந்திரங்கள்என்ன‍தான் சம்பாதித்தாலும் வீட்டில் செல்வம் தங்கவில்லையே என்றும் வரவு அனைத்தும் கைக்கும் வாய்க்குமே சரியாகிறதே, சேமிப்பு என்று

1 ரூபாய் சேமிக்க‍ முடியவில்லையே, என்ற வருத்த‍ம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரு க்கும் ஆறாத பெரும்காயமாக இருந்து வருவ து ஆச்ச‍ ரிய மான விஷயமல்ல‍. இன்றைய விலைவாசி ஏற்ற‍ம், பொருளா’தாரத்தின்’ நெருக்க‍டி போன்றவற்றால், சிக்கித்தவிக்கும் மனிதனால் என்ன‍ செய்யமுடியும். அவனால் எப்ப‍டி சேமிக்க‍முடியும். அம்மனிதன் சேமிப்பு பெருகவும், செல்வம் செழி க்க‍வும் சிறந்த 16 தாரக தந்திரங்களை இங்கே காண்போம்.

1. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

2. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப் பாடு நீங்கும். வீட்டில் பலவித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெ னில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

3.நமது வீட்டிற்குவரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்ப டும்.

4.அமாவாசை அன்று வீட்டுவாசலில் கோலம் போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதி ல் செய்யக்கூடாது. பித்ருக்களை மட்டும் வழி பட பணம் வரும்.

5. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி நூல் இவைகள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது. பணம் ஓடிவிடும்.

6. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.

7.வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்ட லை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத் தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்துவர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.

8. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.

9.யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3ல் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலி ருந்து நமக்கு சுக்ர திசை தான்.

10. பசுவின் கோமியத்தில் தினமும் சிறி தளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவு ம், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய் திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

11. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும்.

12. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயா ருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

13. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

14.பசும்பாலை சுக்ரஓரையில் வில்வமரத்திற்கு ஊற்றவு ம். 24வெள்ளிக்கிழமைசெய்திட நிச்சியமாக பணம்வரும்

15. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட் டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அத னை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.

16. தினசரி குளிக்கும்முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிதுநேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலி ல் துடைக்கவும் தரித்திரம் விலகும்.

No comments:

Post a Comment

Comment here