Breaking

Friday, September 9, 2016

கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்யபட்ட 10 வகுப்பு மாணவி பலி என்ஜினீயரிங் மாணவர் கைது

கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்யபட்ட 10 வகுப்பு மாணவி பலி என்ஜினீயரிங் மாணவர் கைது



சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகள் புஷ்பா.  அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி விரகனூர் ஏரி கரையில் வேலை பார்க்கும் தாயை பார்ப்பதற்காக  சென்றார்.    ஆனால்  பல மணி நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மற்றும் உறவினர்கள்  அக்கம் பக்கத்தில் தேடினர்.

அப்போது புஷ்பா ஏரிக் கரையில் கை-கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலை யில்  கிடந்தார். இதைப் பார்த்த  உறவினர்கள் அவரை மீட்டு அழைத்து வந்தனர். அவரது உடலில் மார்பு உள்பட பல பகுதிகளில் காயங்களும் இருந்தது. புஷ்பாவிடம் உறவினர்கள்  விசாரித்த போது  அவர் அதிர்ச்சி தகவலை  கூறினார்.

அதன் விவரம் வருமாறு:-

தாய் செல்வியை பார்ப்ப தற்காக புஷ்பா விரகனூர் ஏரிக்கரைக்கு அடிக்கடி சென்று வந்தார்.இதனை நோட்டமிட்ட  அந்த பகுதியை சேர்ந்த என்ஜினீய ரிங் கல்லூரி மாணவர் விக்னேஷ் (18) அவரை பலாத்காரம் செய்ய முடிவு செய்தார்.

கடந்த 4ந் தேதி  மாணவி சென்ற போது பின் தொடர்ந்து சென்ற  மாணவர்  விக்னேஷ் திடீரென  மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றார். அந்த ஏரிக்கரையிலேயே மறைவான இடத்தில் வைத்து புஷ்பாவை பாலியல பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததால் கை-கால்களை  கயிற்றால் கட்டினார்.

பின்னர் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியலபலாத்காரம் செய்து உள்ளார். அப்போது மாணவி போராடியதால் அவரது உடலில் பல  இடங்களில்   காயம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன  விக்னேஷ் மாணவியை அப்படியே போட்டு  விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுபற்றி மாணவியின் தாய் விரகனூர் போலீசில்  புகார் கொடுத்தார்.

பின்னர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி யில்  சேர்த்தனர். அப்போது புஷ்பா விஷம் குடித்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட் டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு புஷ்பா பரிதாபமாக  இறந்தார்.

இதற்கிடையே  போலீசார்  விக்னேசை   கைது செய்தனர். பிரேத பரிசோதனை முடி வில் தான் அவர் விஷம் குடித்து இறந்தாரா ? அல்லது தாக்கப்பட்டதில் இறந்தாரா? என்று தெரியவரும்.

No comments:

Post a Comment

Comment here