வெள்ளிப்பதக்கம் வென்றதே உண்மையில் மகிழ்ச்சி தான்–சிந்து பேட்டி
வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு பி.வி.சிந்து நிருபர்களிடம் கூறியதாவது:–
இறுதியில் என்னால் வெள்ளிப்பதக்கமே பெற முடிந்தது. வெள்ளிப்பதக்கம் வென்றதே உண்மையில் மகிழ்ச்சி தான். அதை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன்.
தங்கம் வெல்ல முடியாவிட்டாலும் நான் மிகவும் கடினமாக உழைத்தேன். ஆட்டம் இரு தரப்புக்கும் சவாலாக இருந்தை பார்த்து இருப்பீர்கள்.
இரண்டு பேரும், தாக்குதல் ஆட்டத்துடன் ஆக்ரோஷமாக ஆடினோம். ஆனால் யாராவது ஒருவருக்கு தான் வெற்றி கிடைக்கும். இது கரோலின் மரினுக்குரிய நாளாக அமைந்து விட்டது. அவருக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு சிந்து கூறினார்.
No comments:
Post a Comment
Comment here