வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத சில காலை உணவுகள்!
காலை உணவு என்பது ஒரு நாளின் மிகவும் முக்கியமான உணவு என்பது அனைவருக்கும் தெரியும். காலை உணவு தான் ஒரு நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவியாக இருக்கும். முன்பெல்லாம் காலை உணவு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது.
ஆனால் தற்போதைய அவசர உலகில் காலை உணவை சாப்பிடுகிறார்களே தவிர, அது ஆரோக்கியமானதாக என்று யாரும் பார்ப்பதில்லை. வெறும் காலை உணவை சாப்பிட்டால் மட்டும் உடல் ஆரோக்கியம் மேம்படாது, சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால் மட்டுமே உடல் ஆரோக்கியம் மேம்படும்.
எனவே இங்கு தமிழ் போல்ட் ஸ்கை காலை வேளையில் சாப்பிடக்கூடாத சில உணவுகளையும், அதற்கான சிறந்த மாற்று உணவுகளையும் கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து பின்பற்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட செரில்கள்க
ட்டாயம் இந்த உணவை அதிகாலையில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். பலர் காலையில் சாப்பிட நேரம் இல்லாவிட்டால், இந்த செரில்களை ஒரு பாக்கெட் வாங்கி வெதுவெதுப்பான பால் சேர்த்து கலந்து சாப்பிடுங்கள். ஆனால் இந்த ஃபுரூட் லூப், ஹனி லூப் போன்ற செரில்கள் உடல் பருமனைத் தான் அதிகரிக்கும் மற்றும் இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது என்பதை மறவாதீர்கள்.
சிறந்த மாற்று
சர்க்கரை சேர்க்கப்பட்ட செரில்களுக்கு பதிலாக, இட்லி, தோசை போன்றவற்றை உட்கொள்ளலாம். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியமும் சீர்குலையாமல் இருக்கும்.
வெள்ளை பிரட்வெ
ள்ளை பிரட்டில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவு. அதே சமயம் இதில் சுத்திரிகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளது. மேலும் வெள்ளை பிரட் மைதாவால் தயாரிக்கப்படுவதால், இதனை அதிகாலையில் உணவாக உட்கொண்டால், அதனால் உடலுக்கு தீங்கு தான் நேரும்.
சிறந்த மாற்று
வெள்ளை பிரட்டிற்கு பதிலாக கோதுமை பிரட் சாப்பிடலாம். அதிலும் பச்சை இலைக் காய்கறிகள், தக்காளி போன்றவற்றைக் கொண்டு சாண்ட்விச் தயாரித்து சாப்பிடலாம்.
காபி
பலருக்கும் காலையில் எழுந்ததும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் காபியைக் குடித்து வந்தால், அதில் உள்ள காப்ஃபைனினால் தீவிர விளைவை சந்திக்க நேரிடும்.
சிறந்த மாற்று
வேண்டுமானால் காலையில் காபி, டீக்கு பதிலாக, க்ரீன் டீ, லெமன் டீ போன்றவற்றைக் குடிக்கலாம். அதுவும் சர்க்கரை சேர்க்காமல், தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு சாண்ட்விச்ஒ
ருவேளை இதுவரை நீங்கள் அதிகாலையில் உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளை பிரட் கொண்டு சாண்ட்விச் செய்து சாப்பிட்டு வந்திருந்தால், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் இது மிகவும் மோசமான காலை உணவு. குறிப்பாக இந்த உணவை குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.
சிறந்த மாற்று
முழு தானிய பிரட்டுடன் பச்சை இலைக் காய்கறிகள், தக்காளி, முட்டைக்கோஸ் போன்றவற்றை வைத்து சாண்ட்விச் செய்து சாப்பிடலாம். இல்லாவிட்டால், பசலைக்கீரை ஆம்லெட் தயாரித்து, 2 கோதுமை பிரட் நடுவே வைத்து சாப்பிடலாம்.
எண்ணெயில் வறுத்த உணவுகள்அ
திகாலையில் எண்ணெயில் வறுத்த உணவுகளை எப்போதும் சாப்பிடாதீர்கள். காலையிலேயே மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவை உட்கொண்டால், அதனால் நாள் முழுவதும் மிகுந்த சோர்வுடன் இருக்கக்கூடும்.
சிறந்த மாற்று
காலையில் மோனோ சாச்சுரேட்ட கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் புரோட்டீன் நாள் முழுவதும் வயிற்றை நிரம்பி இருக்கச் செய்வதோடு, தசைகளின் வளர்ச்சிக்கும் உதவும். ஆகவே எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பதிலாக, ஒரு பௌல் முளைக்கட்டிய பயிர்களில், எலுமிச்சை சாறு, மிளகுத் தூள், கொத்தமல்லி மற்றும் தக்காளி சேர்த்து சாலட் செய்து சாப்பிடுங்கள்.
No comments:
Post a Comment
Comment here