மனிதர்கள் வாழ தகுந்த பூமியை போன்றே மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு
மனிதர்கள் வாழ தகுந்த பூமியை போன்றே மற்றொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டாவது பூமியாக திகழும் புதிய கிரகம் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
நமது சூரிய மண்டலத்தில் இருந்து சுமார் 4.2 ஒளியாண்டுகள் அல்லது 25 ட்ரில்லியன் மைல் தொலைவில் உள்ளது. குறித்த புதிய கிரகம் ப்ரோக்ஸிமா பி சென்டவுரி (Proxima Centauri)அருகில் உள்ளது.
நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பிராக்ஸிமா போல ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான குட்டி குட்டி நட்சத்திரங்கள் உள்ளன. இருப்பினும் நமது சூரியக் குடும்பத்திற்கு வெகு அருகே நம்மைப் போன்ற ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
No comments:
Post a Comment
Comment here