Breaking

Friday, August 19, 2016

இளம் வயதிலேயே ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார்

இளம் வயதிலேயே ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார்




ரியோ டி ஜெனீரோ,

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் நம்பர் 1 ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மாரினுக்கு எதிராக இந்திய வீராங்கனை பிவி சிந்து 3 செட்களில் (21-19, 12-21, 15-21) இறுதி வரை போராடி வெற்றிக்கனியை பறிக்க முடியாமல் வெள்ளி வென்று சரித்திர சாதனை படைத்தார்.பிவி சிந்துவிற்கு இது அறிமுகப் ஒலிம்பிக் போட்டியாகும். அறிமுகப் ஒலிம்பிக் போட்டியிலே இந்தியாவுக்காக பேட்மிண்டனில் முதல்முறையாக வெள்ளிப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார். 

ரியோ ஒலிம்பிக் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை பி.வி.சிந்து ஆவார்.

ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இறுதி சென்று வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை பிவி சிந்து ஆவார்.

இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்தியாவின் பிவி சிந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 5வது வீராங்கனை என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்து உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் மிகவும் இளம் வயதிலேயே பதக்கம் வென்ற வீராங்கனை, என பல்வேறு பெருமைகளை தனதாக்கிஉள்ளார். தன்னுடைய அறிமுக ஒலிம்பிக் தொடரில் சிந்து வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் மற்றும் மனோவலிமை அனைவரையும் ஈர்த்தது என்பதில் ஐயம் கிடையாது. சிந்துவின் வெற்றியை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

ஒலிம்பிக் பேட்மிண்டன் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவிற்கு ரூ. 1 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்து உள்ளது. மத்திய பிரதேசம் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். பிவி சிந்துவிற்கு பிற மாநில முதல்-மந்திரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Comment here