உலகின் மிகப்பெரிய விமானம் வெற்றிகரமாக தனது முதல் பயணத்தை முடித்தது

ஹைபிரிட் ஏர் வெகில்ஸ் (Hybrid Air Vehicles) என்ம் நிறுவனம் 35.6 மில்லியன் டாலர் செலவில் ஏர்லேண்டர்-10(Airlander ) எனற விமானத்தை உருவக்கியது. இந்த விமானம் 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்டது.
விமானம், ஹெலிகொப்டர் மற்றும் விண்கலம் என மூன்றையும் கலந்து செய்த கலவையே இந்த விமானம். பெட்போர்டுசையரில் உள்ள கேர்டிங்டான் விமானத்தளத்திலிருந்து முதல் பயணத்தை தொடங்கியது.
உலகின் பெரிய விமானம் வானில் பறப்பதை காண, புகைப்படக்காரர்களும், மக்களும் விமான தளத்தில் குவிந்தனர். மேலும் கைதட்டி ஆரவாரம் செய்து முதல் பயணத்தை ஊக்குவித்தனர்.
இங்கிலாந்து நிறுவனம் மேற்கொண்ட பல சீரமைப்பிற்கு பின்னர், வெற்றிகரமாக வானில் பறந்த ஏர்லேண்டர் 10, தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
எச்.ஏ.வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் மெக்கலன் இது குறித்து கூறுகையில் இது ஒரு ராட்சத ஹெலிகொப்டர், ஒரு ஹெலிகொப்டர் செய்வதை ஏர்லேண்டர் 10 செய்து விடும். ஹீலியம் எனப்படும் வாயுவைக் கொண்டு மாசுபடுத்தாமல் இயங்கும் இந்த விமானம், ராணுவ உபகரணங்களை மிகவும் தொலைவான பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கும், கண்காணிப்புக்கும், ஆடம்பர பயணங்களுக்கும் ஏற்றது என குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
Comment here