Breaking

Wednesday, August 24, 2016

‘ஆன்–லைன்’ மூலம் பதிவு செய்த கேமராவுக்கு பதிலாக பார்சலில் செங்கல் வந்ததால் அதிர்ச்சி தனியார் நிறுவன ஊழியர் போலீசில் புகார்

‘ஆன்–லைன்’ மூலம் பதிவு செய்த கேமராவுக்கு பதிலாக பார்சலில் செங்கல் வந்ததால் அதிர்ச்சி தனியார் நிறுவன ஊழியர் போலீசில் புகார்




பெங்களூரு,

‘ஆன்–லைன்‘ மூலம் பதிவு செய்த கேமராவுக்கு பதிலாக பார்சலில் செங்கல் வந்ததால் தனியார் நிறுவன ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
‘ஆன்–லைன்’ மூலம் கேமரா பதிவு

பெங்களூரு மாரத்தஹள்ளியில் வசித்து வருபவர் ரஞ்சித் குமார் (வயது 26). தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது சகோதரிக்கு பரிசு அளிப்பதற்காக ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள கேமரா ஒன்றை ‘ஆன்–லைன்‘ மூலம் பதிவு செய்தார்.

அதனை தொடர்ந்து, ரஞ்சித் குமார் பதிவு செய்த கேமராவுக்கான பார்சலை ‘ஆன்–லைன்‘ வர்த்தக நிறுவன ஊழியர் ஒருவர் அவருடைய அலுவலகத்திற்கு சென்று கொடுத்தார். இதையடுத்து, ரஞ்சித் குமார் கேமராவுக்கான ரூ.36 ஆயிரத்தை வர்த்தக நிறுவன ஊழியரிடம் செலுத்தினார்.
பார்சலில் செங்கல் வந்தது

பின்னர், அவர் பார்சலை பிரித்து பார்த்தார். அப்போது, பார்சலின் உள்ளே கேமரா இல்லை. மாறாக செங்கல் வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் குமார் உடனடியாக ‘ஆன்–லைன்‘ வர்த்தக நிறுவனத்தை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்தார். அப்போது அவர், பதிவு செய்த கேமரா அல்லது அதற்கான கட்டண தொகை ரூ.36 ஆயிரத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார்.

இருப்பினும், ‘ஆன்–லைன்‘ வர்த்தக நிறுவனத்தினர் ரஞ்சித் குமாருக்கு சரியாக பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ரஞ்சித் குமார், மகாதேவபுரா போலீசில் ‘ஆன்–லைன்‘ வர்த்தக நிறுவனம் மீது புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Comment here