Breaking

Saturday, August 6, 2016

திருமண செலவு 9 கோடி பண்ரூட்டியில் பரபரப்பு

திருமண செலவு 9 கோடி பண்ரூட்டியில் பரபரப்பு
கேடி அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., குடும்பத்துக்கு எப்படி வந்தது பல கோடி!

பிரமித்து போனார்கள் பண்ரூட்டி நகர மக்கள், நகராட்சி சேர்மனும், பண்ரூட்டி தொகுதி எம்.எல்.ஏ., ஆகியோர்களின் இரண்டாவது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியைக் கண்டு. பண்ரூட்டி வட்டம் காமராஜர் நகரைச் சேர்ந்த பண்ரூட்டி நகராட்சி சேர்மன் பன்னீர் செல்வம் பண்ரூட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வான சத்யா இவர்களின் இரண்டாவது மகன் மணிகண்டபிரபுவுக்கும், பண்ரூட்டி திருவதிகையை சேர்ந்த செல்வகுமார், தவமணி ஆகியவர்களின் மகள் துர்காலட்சுமி (எ) ஸ்ரீலட்சுமிக்கும் கடந்த 11ந் தேதி எளிமையாக திருப்பதியில் திருமணம் முடிந்த தம்பதிகளுக்கு பண்ரூட்டி திருவதிகையில் உள்ள அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின்கீழ் இயங்கும் வீரட்டானேஸ்வரர் கோயிலில் 31/06/2016 அன்று பிரமாண்டமாக பல கோடி செலவில் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது. கொடி, தோரணங்கள் பல வண்ண ஒளி மின்விளக்குகள், கட்அவுட், பிளக்ஸ்போர்டு 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், விலையுயர்ந்த திருமண அழைப்பிதழ்கள், ஆடம்பர விளம்பரங்கள், லஷ்மண் ஸ்ருதி இன்னிசை கச்சேரி, கோட்டை வடிவ அரங்கு என பல சகலங்களுடன் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்க, ஆங்காங்கே மக்கள் கூட்டம் பெருக்கெடுத்தது.

அழையாத விருந்தாளியாய் அந்த நிகழ்ச்சியில் நாமும் கலந்துகொண்டபோது நம்மளையே அதிர்ச்சியடைய வைத்தது அந்த வரவேற்பு நிகழ்ச்சி. இதில் அ.தி.மு.க.,வை சேர்ந்த கட்சித் தொண்டர்கள், வார்டு உறுப்பினர்கள், கிளை, நகரம், பேரூராட்சி, ஒன்றியம், மாவட்டம் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்கள் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, நிகழ்ச்சியும் களை கட்ட தொடங்க, நகர மக்களும் வரவேற்பு நிகழ்ச்சியை மிஸ் பண்ணவில்லை.

இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் கோயில் மட்டும் இல்லாமல் பண்ரூட்டி நகரமே குலுங்கியது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட ஆடம்பரமான அரங்குகளை ஆங்காங்கே குவிந்த மக்கள் வியப்புடன் வாயை பிளந்தவாரே பார்க்க, கண் கூசும் ஒளி வெளிச்சத்தை தாங்க முடியாமல் “எல்லாம் எவன் வீட்டு பணம், இவனுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது, வருமானவரித்துறை அதிகாரிகள் என்ன செய்யுறாங்க” என்ற பல கேள்விகளுடன் முணுமுணுத்துக் கொண்டே சாப்பிட தொடங்கினார்கள்.

அவர்களை பல்ஸ் பிடித்து நிகழ்ச்சிக்கு வந்த கட்சிக்காரர்களின் வாயைக் கிளறினோம். அப்போது அவர்கள் கொட்டிய முத்தான வார்த்தைகள் இதோ உங்களுக்காக….. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளை கடந்து நிற்கும் புகழ் பெற்ற வீரட்டானேஸ்வரர் கோயிலைத்தான் களங்கப்படுத்தி இருக்கிறார்கள். பண்ரூட்டி சேர்மன் பன்னீர்செல்வமும் அவருடைய மனைவியுமான எம்.எல்.ஏ.,சத்யா. இவர்களுக்கு ஆதரவாக பண்ரூட்டி காவல்துறை அதிகாரிகளும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நாகராஜனும் செயல்படுகிறார்கள். இந்த கோயில் வளாகம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வான வேடிக்கை, ஆடல், பாடல் மற்றும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்து உள்ளது. மீறினால் சட்டப்படி சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போர்டு மாட்டி இருக்கிறார் செயல் அலுவலர் நாகராஜன்.

ஆனால் இந்த கோயில் வளாகத்தின் உள்ள கோட்டை வடிவ மிகப்பெரிய பிரம்மாண்டமான அரங்கு அமைத்தும் மண மக்கள் வரவேற்புக்கும், இன்னிசை கச்சேரிக்கும், சாப்பிடுவதற்கும் என தனித்தனியே அரங்குகள் அமைத்தும், மக்களின் உணர்வுகளுக்கும், தெய்வ நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பழமை வாய்ந்த கோயிலின் சுவரை உடைத்து, சாப்பிட்டவர்கள் கை கழுவுவதற்கு போட்டு கோயிலில் உறுதி தன்மையை பலவீனம் அடைய செய்து இருக்கிறார், அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., சத்யாவும், இவருடைய கணவர் சேர்மன் பன்னீரும். குளக்கரையின் பக்கத்தில் சமைப்பதற்கு செட்டு போட நந்தவனம் மற்றும் குளக்கரையின் சுற்றுப் பகுதியில் இருந்த அத்திமரம், பொங்கைமரம், சந்தன மரம், நாவல் மரம், வேப்ப மரம், மற்றும் மூலிகை செடிகளை வெட்டிவிட்டு செட்டு போட்டு சமைத்தார்கள். இதனால் அந்த பகுதியில் சுற்றுசூழல் மாசுபட்டதுடன் இல்லாமல் அந்த பகுதியில் வீசிய அனல் காற்றால் பல மூலிகை செடி, கொடிகளும் கருகி போனது. இவ்வளவு அட்டுழியங்களை அரங்கேற்றிய இவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? என்று முத்துக்களை சிதறவிட்ட கட்சிகாரர்கள்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்பதற்காக சென்னையில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளம் பெண்களை வரவைத்து, கோயிலின் நுழைவாயிலின் வழியில் நிற்கவைத்து, அந்த பெண்களை காட்சிப் பொருள் ஆக்கினார்கள். இவர்களுக்கு துணையாக யானையும் நிற்க வைத்து தான் ஒரு ஜமீன் பரம்பரை போல் சித்தரித்துக் காட்டிக் கொண்டார். கோட்டை (அரங்கு) முழுவதும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு இந்தியாவின் சைவ உணவு வகைகள் எத்தனை வகைகள் இருக்கிறதோ அத்தனை உணவு வகைகளும் பரிமாறப்பட்டது. இதைத்தவிர பழ வகைகள், ஐஸ்கீரிம், மசாலா பால் போன்ற வகை வகையான அயிட்டங்கள் மூலம் வந்தவர்களை அசத்தினார். இவ்வளவு செலவுகளுக்கும் பணம் எங்கிருந்து வந்தது.

மேலும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பறக்கும் ஹெலிகாப்டர் கேமரா, கிரேன் கேமராக்கள், மற்றும் 30க்கும் மேற்பட்ட கேமரா மேன்கள், இதைத்தவிர 300க்கும் மேற்பட்ட சமையக்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலை செய்தார்கள். இவர்களுடன் நகராட்சி துப்புரவு பணியாளர்களும் பயன்படுத்திக் கொண்டாராம் எம்.எல்.ஏ., சத்யா, பன்னீர்செல்வம். இதனால் மக்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத அளவுக்கு அந்த கோயிலை ஒரு வாரமாக ஆக்கிரமித்துக் கொண்டாராம், மக்கள் சொத்துக்களையும், நகராட்சி சொத்துக்களை யும் அபகரிக்கும் பெண்கள் பித்தன் பன்னீர். இவர் ஜெயாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தையே மிஞ்சி இருப்பாரோ என்ற சந்தேகம் அங்கு குவிந்த மக்களிடையே உருவாகும் அளவுக்கு தங்கள் மகன் ஆடம்பர திருமண வரவேற்பு நிகழ்ச்சி செலவு அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment

Comment here